காலியில் ஆயுத குழு மேற்கொண்ட தாக்குதலில் ஓரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் கரந்தெனிய யக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் வீட்டிலிருந்த தாய், தந்தை மற்றும் மகன்மார் இருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் எம்பலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தாயார் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், இரு மகன்களும் தந்தையும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொள்ள வந்த சந்தேக நபர்களில் ஒருவர் அசிட் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.