தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இருவருக்கும் இரு குழந்தைகள் உண்டு.
அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் திருமணத்திற்கு பிறகு மனைவியை நடிக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அஜீத்தின் மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னதாக ஆத்விக்கின் பள்ளி விழாவில் அஜீத் கலந்து கொண்டார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.