தனியார் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சில ராசிகள் தங்களின் துணை அல்லது கணவரை அல்லது மனைவியை அதிகம் ஏமாற்றுவதாக பட்டியல் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தனியார் டேட்டிங் இணையதளம் ஒன்று தங்களது இணையதளத்திற்கு, அதிகமாக திருமணமானவர்கள் வருவதாகவும். அவர்கள் டேட்டிங்கிறகு ஒரு துணையை தேடுவதாகவும் தகவல் வெளியிட்டது.
சுமார் 2.9 மில்லியன் நபர்கள் இந்த இணையதளத்தில் இதற்காகவே பணம் செலுத்தி மெம்பர்களாக உள்ளனர். இதில் குறிப்பிட்ட ராசிக்காரகள் அதிகளவில் காணப்படுவதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இதில் தங்களது துணைக்கு தெரியாமல் டேட்டிங் செல்ல வரும் நபர்களின் பிறந்தநாள் விவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது பெரும்பாலானோர் தனுசு ராசிக்காரர்களாக உள்ளனர்.
இதில் இரண்டாவது இடத்தில் மிதுன ராசிக்காரர்களாகவும், மூன்றாவது இடத்தில் மேஷ ராசிக்காரர்களும் அதிகளவில் தங்களது துணையை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு துணையுடன் டேட்டிங் செல்வதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
\
இப்பட்டியலில் மற்ற ராசிக்காரகள் இருந்த போதும், கன்னி, மீனம், விருச்சிக ராசிக்காரர்கள் மிக மிகக்குறைந்த அளவே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, இந்த இணையதளத்தை அதிகம் பயன்படுத்தும் நபர்களின் அதிகமானோரின் பிறந்த தேதிகள் கிட்டத்தட்ட ஒரே தேதிகளாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.