கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள நீண்ட கால பராமரிப்பு இல்லம் ஒன்றில் உள்ள முதியோர்களுடைய ஆசைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் பராமரிப்பு இல்லத்தினர்.
அந்த வகையில் முதியவர்களை அழைத்து அவர்களின் ஆசைகளை கேட்டு ஆராய்ந்த போது 71 வயது முதியவர் ஒருவரின் ஆசை பராமரிப்பு இல்லத்தினரை நெகிழ வைத்துள்ளது.
71 வயதுடைய டேவ் றொஸ்மன் என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் இருந்து 20 நிமிடங்களில் செல்லக்கூடிய தூரத்தில் உள்ள மயானத்திற்கு சென்று மறைந்த தனது மனைவி பார்பெல் மற்றும் மகள் ஆஞ்சா ஆகியோரின் கல்லறைகளில் பூச்செண்டு வைக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
முதியவரின் ஆசையை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த முதியோர் இல்லத்தினர் அவரது ஆசையை கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரே நிறைவேற்றி வைக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது ஆசையை நிறைவேற்றிவைத்துள்ளனர்.
மயானத்திற்கு செல்ல முன்னர் கடை ஒன்றிற்கு சென்று சிவப்பு நிற றோசாக்களை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்த பின்னர் மயானத்திற்கு சென்று தனது மனைவி மற்றும் மகளிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக முதியவர் கூறுகையில்:- இந்த நிகழ்வானது எனக்கு ஒரு துயர் துடையப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.