தமிழ் மக்களுக்கு பாரிய அபிவித்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றோம். இந்த தேர்தலில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதற்கான அடி அத்திவாரமாகக் கொண்டு போட்டியிடுகின்றோம்.
இந்த விடயத்தை கிழக்கு மாகாண மக்கள் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் கிழக்கு மாகாணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் 11 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தும் தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதற்கு இயலாமல் போய் 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கரசிக்கு முதலமைச்சர் பதவியினை தாரைவார்து கொடுத்திருந்தனர்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் 4 வருடங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு முஸ்லிம் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளன.
தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை 11 உறுப்பினர்களும் மாகாண சபையில் நித்திரை கொன்றுவிட்டு வந்துள்ளனர். இந்தகைய நிலையை மீண்டும் உருவாக்க இடமளிக்க கூடாது.மீண்டும் கிழக்கு மாகாணத்தை குழப்பபவுதற்கு இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாங்கள் வடக்கு கிழக்கு ரீதியாக பரந்துபட்டளவில் கிழக்கு தலமையை உள்ளடக்கியதாக போட்டியிட்டு வருகின்றோம். எனவே எமது கொள்கையும் வடக்கு கிழக்கு இணைப்புத்தான். ஆனால் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எமது கட்சி குறியாக இருக்கின்றது.
நாங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்து காட்டிவிட்டுத்தான் தேர்தலுக்கு வந்துள்ளோம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று எதனையும் செய்யாமல் மக்கள் முன்வரவில்லை.
மட்டக்களப்பினை பொறுத்தளவில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், குடிநீர், மின்சாரம் போன்றவற்றிறல் நிறைய தேவைகளை நான் நிறைவேற்றியுள்ளேன்.களுவாஞ்சிகுடியில் பாரிய வைத்தியசாலையை அமைத்துள்ளேன்.
அதே போன்று மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைத்துள்ளேன், பலதரப்பட்ட குளங்களை புனரமைத்துள்ளேன், இருளில் மூள்கியிருந்த படுவான்கரை பிரதேசத்திற்கு மூலைமுடுக்கெல்லாம் மின்சாரம் வழங்கியுள்ளேன்.
இதனை நீங்கள் வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கொண்டுவரவேண்டும், இதுவே இன்றைய மட்டக்களப்பின் நிலைப்பாடாகும் எனவே எமது கட்சியானது. இவற்றிக்கு அப்பால் செயற்படும் நாங்கள் மக்களின் நலனினை கருத்திலெடுத்து நிற்சயமாக செயற்படுவோம்.
இவற்றினை உணர்ந்து வாக்களித்தால் இந்த நிலையை நாங்கள் மாற்றியமைக்க முடியும் இல்லாவிட்டால் மேற்கூறிய நிலையே எமக்கு உருவாகும். எனவே வருகின்ற இத்தேர்தலில் எமது கட்சியை நீங்கள் பலப்படுத்த வேண்டும் இதுவே காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.