வெளிநாட்டில் உள்ள இலங்கையரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் கோஷ்டிகளை இயக்கும் 5 பாதாள உலக தலைவர்களை குறி வைத்து அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
டுபாயில் உள்ள மாகந்துரே மதூஷ், கொஸ்கொட சுஜீ, உள்ளிட்டவர்களையும் இந்தியாவில் உள்ள அங்கொட லொக்கா, லடியா ஆகியோரையும் கைது செய்ய புதிய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
இதற்காக சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்று இந்த பாதாள உலக தலைவர்களுக்கு எதிரான சாட்சியங்களை திரட்டி சிவப்பு அறிவித்தல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி கொஸ்கொட சுஜீ என்பவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
33 வயதான குறித்த நபரைக் கைது செய்ய இலங்கையானது சர்வதேச பொலிஸாரின் உதவியை உத்தயோகப்பூர்வமாக நாடியுள்ளதால், சர்வதேச பொலிஸார் இந்த சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்பில் கொஸ்கொட சுஜீ பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.