ஆக்லாந்து திறந்த டென்னிஸ் போட்டியில் இருந்து பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் நியூசிலாந்தில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டியில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகவுள்ளதாக அஸரென்கா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான அஸரன்கா தனது கணவனை பிரிந்த நிலையில் தனது மகனை வளர்ப்பதன் காரணமாகவே சில போட்டிகளில் விலகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் பங்குபற்ற அஸரென்காவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் முதல் நிலை வீராங்கனையாக இருந்த அஸரென்கா தற்போது 210 ஆவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.