அகழ்வின் போது பெறப்பட்ட முத்துக்கள் என கூறி, 420 சிறிய உருண்டைகளை விற்பனை செய்ய முயற்சித்த 5 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை – கலேவெல பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 42 வயதுகளை உடையவர்கள் என தொவிக்கப்படுகிறது.
கலேவெல, பஸ்சர, திஸ்சமஹாராம, வெலிகந்த மற்றும் மஹஒய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த அவர்கள், இன்றைய தினம் தம்புள்ளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.