தினகரன் வீட்டு வாசலில் கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்!

TTV dinakaran press(N)20 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு டி.டி.வி.தினகரன் வீட்டு வாசலில் மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேரை நீக்கிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.

அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறுகையில், பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று கூறினார்.

மக்கள் அனைவரும் 20 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு டி.டி.வி.தினகரன் வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான் என்றும் ஓ.பி.எஸ் விமர்சித்துள்ளார் .