இதனால் தான் நாங்கள் ஜெ.,வை பார்க்கவில்லை…… – ஓ.பி.எஸ்

201712250910127722_Deputy-Chief-Minister-wishes-to-Christmas-festival_SECVPFமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆகியோர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற போது அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை என அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார்.

தாங்கள் சென்று பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இன்பெக்ஷன் வந்துவிடும் என்று சசிகலா குடும்பத்தினர் கூறியதால் தான் நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜெ.,வுக்கு இன்ஃபெக்ஷன் வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் தான் பார்க்கவில்லை என்றும் கூறினார். ஏற்கனவே ஓ.பி.எஸ், சசிகலா குடும்பத்தினர் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணத்தினால் ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார்.

அப்போதும் அவர் இதையேதான் கூறினார். அதுபோல ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தான் கூறியதையும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று நினைவு கூர்ந்தார்.

முன்னதாக தனி அணியாக பிரிந்து செயல்பட்டபோதும் கூட ஓ.பி.எஸ், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்றே கூறி வந்தார். இந்த நிலையில் இன்றும் அவர் மீண்டும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.