மன வேதனையில் வருங்கால பிரித்தானிய இளவரசி!

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து பிரித்தானிய இளவரசியாகவிருக்கும் மேகன் மெர்க்கலுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம்.

5a40a63246f83-IBCTAMILநாய்கள் எனது நண்பர்கள் எனவும் அவற்றுடன் நேரம் செலவிடுவது எனக்கு மிகவும் விருப்பமான விடயம் என்றும் மேகன் மெர்க்கல் பல முறை பேட்டிகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் பிரியமாக வளர்த்த இரண்டு நாய்களில் Bogart என்ற நாய் விபத்தில் சிக்கி அதன் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு அதன் கால்களை நீக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் மிகவும் மன வேதனையடைந்த மேகன் மெர்க்கல் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது நாய்களின் புகைப்படத்தை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார்.

மேலும் அண்மையில் அவருடைய திருமண திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு நடந்துள்ளமை அவருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது எலும்பியல்-நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் நோல் பிட்ஸ்பாட்ரிக் என்பவரின் உதவியுடன் தனது நாயின் கால்களை குணப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டு வருகிறார்.