ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

உலகையே உலுக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இந்த அனர்த்தினால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்த அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு உயிரிழந்த தமது உறவுகளை மிகவும் உணர்வுபூர்வாக நினைவுகூர்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.