மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், குற்றவாளிகளும், ஊழல் செய்தவர்களும் இடம்பெற்றிருப்பதாக, சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டியில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், கொலை குற்றவாளிகளும், பெண்களை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கியவர்களும், மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளில், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.