அரசுக்கு நன்றி தெரிவித்த குல்பூஷன்!

தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

calboபாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜாதவை அவரது குடும்பத்தினர் நேற்று (25) சந்தித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து குல்பூ ஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவியும் சந்தி்த்தனர். இந்த சந்திப்பின் காரணமாக இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் குல்பூஷன் ஜாதவ்.