தற்கொலைப்படை தாக்குதல்! 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பொதுமக்கள் பரிதாபகராமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பொலிஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. கிறிஸ்துமஸ் தினமான இன்று (25) காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக திடீரென காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில் புகுந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த வில்லை.

கிறிஸ்துமஸ் தினமான இன்று இவ்வாறு 6 பேர் பலியாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த வாரம் இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பொலிசார் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

201604112040011512_12-killed-in-suicide-bomb-attack-on-army-recruits-in_SECVPF