11 நாடுகளிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

அமெரிக்காவிற்குள் 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் நுளைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

UtNcGcIVbjsc_1எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு சூடான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த தடை உத்தரவு 120 நாட்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகும் அந்த தடை உத்தரவு முழுமையாக நீக்கப்படவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சீட்டில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் தலைமையில் நடந்த வழக்கில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை நீதிபதி ஏற்கவில்லை. எனவே 11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.