இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுடன் இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமாக அரசியலுக்கு அடித்தளமிட்டுள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் 20ம் தேதி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெறும் வீடியோவை வெளியிட்டார்.
இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜெயலலிதா வீடியோவை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு கூறினால் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட்டுள்ளீர்கள்.
இது ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என கூறி கிருஷ்ணப்ரியாவும் அன்றைய தினம் தினகரனுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.
இதனால், தினகரன் குடும்பத்திற்குள் கருத்து மோதல்கள் வெடித்தது. ஆனால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் தன்னுடைய முகப்புத்தகத்தில் 2005ம் ஆண்டு ஜெயலலிதா தனக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான் என்பதை குறிக்கும் வகையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது.
ஜெயலலிதா கிருஷ்ணப்ரியாவின் கைகளை பிடித்து வளைகாப்பு செய்வதை நேரடியாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, நான் அரசியலுக்கு வருவேன் என கிருஷ்ணப்பிரியா கூறியிருந்தார். இந்நிலையில், தன்னுடன் ஜெயலலிதா இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது அவர் விரைவில் தினகரனுக்கு எதிராக அரசியல் களம் காண்பார் என தெளிவாக தெரிகிறது.