தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்பவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து எதிர்வரும் 02.01.2018 அன்று சிதம்பரம் கோயிலுக்கு செல்வதற்கு இலங்கை இந்திய அரசுகள் அனுமதித்துள்ளன. எனவே சிதம்பரத்துக்கு செல்ல விரும்புபவர்கள் விசாவிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதுவருடத்தை முன்னிட்டு லீவு நாட்கள் காணப்படுகின்ற காரணத்தினால் இந்தியா சிதம்பரத்துக்கு செல்ல விரும்புபவர்கள் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் இணைய வழி மூலம் தமது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு மறவன்புலவு கே.சச்சிதானந்தம் கேட்டுக்கொண்டார்.
கப்பல் ஒழுங்கு இன்னும் ஏற்பாடாகாத நிலையிலும் வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் செல்ல விரும்புபவர்கள் இந்திய பணம் ஆகியவற்றையும் தயாராக வைத்திருக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து சிதம்பரம் செல்பவர்கள் பதிவு செய்தவற்குரிய இடங்கள் தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் இந்து விவகார அமைச்சினால் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண ஆளுனர், இந்துவிவகார அமைச்சு, சைவபரிபாலனசபை, இந்துசமயப்பேரவை கொடிகாமம் சிவதொண்டர் பேரவை, மாவட்டபுரம் கந்தசுவாமி திருப்பதி சபையினர் ஆகியோர் மறவன்புலவு கே.சச்சிதானந்தத்துடன் இணைந்து சிதம்பரத்துக்கு செல்லக்கூடிய ஒழுங்களை செய்து வருகின்றனர்.