பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதியரின் நிச்சயதார்த்த புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த புகைப்படம் வெளியிடப்பட்டவுடன் வைரலாக பரவியது.
அந்த புகைப்படத்தில் 36-வயதான மேகன் மெர்க்கல் அணிந்திருந்த ஆடை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகதகவென மின்னும் அந்த ஆடையின் மதிப்பு 56,000 பவுண்ட்ஸ் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் செலவழித்து லண்டனை சேர்ந்த டிசைனர் மூலம் நையப்பட்டுள்ள அந்த ஆடையை தனியார் நிறுவனம் மூலம் வாங்கியதாக அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரண்மனையின் அடுத்த வாரிசாக இராஜ குடும்பத்தில் இணைந்துள்ள மேகன் மெர்க்கல், தன்னை ஆடம்பரமாக காட்டிக்கொள்ளவே இந்த ஆடையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விண்ட்சர் கேஸ்டில் அரண்மனையில் நடைபெற்ற இவர்களின் நிச்சியதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது