கல்வி அமைச்சின் நடவடிக்கைகளில் அரச கரும மொழிகளை செயற்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தாமல் தனிதமிழ் மொழியில் சுற்றறிக்கை வெளியிடுவது தொடர்பான அமைச்சரது செயற்பாடு கண்டிக்கத்தக்கது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் குறிப்பிடு கையில், கடந்த 22ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் மொழியில் சுற்றறிக்கைகள் வெளியிடுவது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.இதுவரை காலமும் அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எவ்வித முயற்சியும் கல்வி அமைச்சு மேற்கொள்ளப்படவில்லை. அரச நிறுவனங்களில் மூன்று மொழிகளும் பிரதானமாக செயற்படுத்த வேண்டும் என அரச நிர்வாக சேவை சட்ட கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அரச கரும மொழிகள் தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தாதது கண்டிக்கத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சில் இலங்கை ஆசிரிய சங்கத்தின் சார்பில் பல விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதமாக செயற்பட்டுள்ளமை ஒருதலைப்பட்சமானது. நாட்டில் உள்ள 10162 பாடசாலைகளில் 2989 பாடசாலைகள் தமிழ் மொழியில் இயங்குகின்றது. முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோதபாய ஜெயரத்ன அரசகரும மொழிகளை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த மாகாண பிரதான செயலாளர் மற்றும் தேசிய பாடசாலைகளது அதிபர் உட்பட அமைச்சர்களுக்கு 2013.01.08 ஆம் திகதி எழுத்து மூலம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவ்விடயம் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 2017ஆம் ஆண்டு வரை வெளி யிடப்பட்டுள்ள 50 சுற்றறிக்கையில் 2 சுற்ற றிக்கைகள் மாத்திரம் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் மும்மொழி ஆளுமை இளைய சமூகத்தினரிடம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். தமிழ்மொழி பேசுகின்ற ஆசிரியர் கள் கொழும்பு உள்ளிட்ட ஏனைய கல்வி வலயங்களில் சிங்கள மொழியின் பரீட்ச யம் இல்லாததன் காரணமாக சிரமங் களை எதிர்கொள்கின்றனர். இந்நிலைமை க்கு அரச கரும மொழிகளின் விருத்தி முன்னெடுக்கப்படாமையே பிரதான கார ணியாக காணப்படுகின்றது. அரச கரும மொழிகளை கல்வி அமைச்சு சமுதாயத்தின் மத்தியில் விருத்தி செய்வதற்கான நடவடிக் கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் சுட்டிக்காட் டியுள்ளனர்.