ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அதிமுகவினரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தரப்பு படு உற்சாகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிமுகவின் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலரையும் தங்கள் பக்கம் அழைத்துச் செல்லும் தீவிரத்தில் உள்ளனர்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் உளவுத் துறையினர் கண்டறிந்து, அதனை ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தகவலாக சொல்லி இருக்கின்றனர்.
இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு, உளவுத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து யாராவது வந்து சந்திக்கின்றனரா என்று உளவுத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உளவுத்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தான் இந்த பணி நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றது.