குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஓதவ் நகரில் சிலர் சாலையோரங்களில் கடை வைத்து துடைப்பங்கள் விற்று வருகின்றனர். அவர்கள் சாலைகளிலேயே படுத்து உறங்குவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் இருந்த பெண் ஒருவரிடம் அமித் தாகூர் என்ற வாலிபர் குடிபோதையில் தகாத முறையில் பேசியுள்ளார். அப்போது பொதுமக்கள் கூடியதால் அவர் ஓடிவிட்டார்.
ஆனால் இரவில் தனது 6 நண்பர்களுடன் திரும்பி வந்த அமீத், அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர்களிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்ற பெண்ணின் கணவர் மற்றும் 13 வயது மகன் போராடினர். அந்த கும்பல் சிறுவனை கத்தியால் குத்தினர். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைர் நடத்தினர். அதில், அமீத் தாகூரின் தந்தை போலீஸ் காண்ஸ்டபிள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமீத் தாகூர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீதி மூன்று பேரை தேடி வருகின்றனர்.