விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மூடுமாறு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அம்பாறை நகருக்கு அண்மையில் விசாலமான காணியில் 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்.தற்போது குறித்த பகுதியில் கல்வி பயில்வதற்கு தமிழ் மாணவர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த பாடசாலையினை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.இப்பாடசாலையானது ஒரு ஆசிரியர் மற்றும் அதிபருடன் கற்றல் செயற்பாடுகள் இன்றி இயங்கி வருவதாகவும், இப்பாடசாலையின் கட்டடங்களில் இராணுவ இளைஞர் படையின் அலுவலகம் மற்றும் டி.ஈ.ஓ ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.இந்நிலையில், அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் விமலசேன மத்தம ஆராச்சினால் இப்பாடசாலையின் நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திஸாநாயக்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறித்த பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1980 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால், அங்கிருந்து வெளியேறினர்.தமிழ் மாணவர்களும் கல்வி கற்க செல்லாத நிலையில் இப்பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்றி இருந்து வெறுமனே இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.