சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார் மற்றும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிக் கழகமும் இணைந்து 150 பில்லியன் டொலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகின்றது.விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலை கட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.3,300 கோடி செலவில் கட்டப்படும் இந்த ஹோட்டலில் மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம், வை-பை வசதி போன்றவைகள் ஏற்பட்டுத்தப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.