எப்படி பேசினால் காரியத்தை சாதிக்க முடியும் என தெரியுமா..?

ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணங்களை வைத்து அவர்களிடம் எப்படி பேசினால் தங்களின் காரியத்தை சாதிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுவதை பார்ப்போமா.

மேஷம்
மேஷம் ராசி உள்ளவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும். இவர்களின் பாராட்டி பேசலாம். ஆனால் வாக்குவாதம் மட்டும் செய்யவே கூடாது.

ரிஷபம்
ரிஷபம் ராசி உள்ளவர்களிடம் மிகவும் கனிவாக பேச வேண்டும். எனவே இந்த ராசிக்காரர்களிடம் மிக கனிவாக பேசினால் நம் காரியத்தை எளிதில் சாதிக்கலாம்.

மிதுனம்
மிதுனம் ராசி உள்ளவர்களிடம் அதிகம் பேசக் கூடாது. ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் பேசினாலும் அதிகமாக மற்றவர்களை ஆராய்ச்சி செய்வார்கள்.

கடகம்
கடகம் ராசி உள்ளவர்களிடம் மிகவும் அன்பாக பேசினால் போதும். இவர்கள் எந்த உதவியாக இருந்தாலும் செய்வார்கள். ஏனெனில் இவர்கள் அன்பை மட்டும் விரும்புவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி உள்ளவர்களிடம் மிக பொறுமையாக பேச வேண்டும். இந்த ராசிக்காரர்கள் படபடவென்று பேசினாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்களிடம் நட்பு உள்ளவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் இவர்களிடம் நிறைய ஆதாயம் கிடைக்கும். ஆனால் உத்திரம் கன்னி ராசியாக இருந்தால் அதிக எச்சரிக்கை வேண்டும்.

துலாம்
துலாம் ராசி உள்ளவர்களிடம் மிகவும் ஜாலியாக பேசலாம். இவர்கள் கம்பீரமாக இருப்பதால், மற்றவர்களை பற்றி சரியாக கணித்து வைத்து விடுவார்கள். அதனால் கொஞ்சம் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிகம் ராசி உள்ளவர்களிடம் அனுசரனையாக பேச வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். ஆனால் அதிக அன்பு செலுத்தும் குணம் கொண்டவர்கள்.

தனுசு
தனுசு ராசி உள்ளவர்கள் அன்பிற்கு அடிமை எனும் குணத்தை கொண்டவர்கள். எனவே இந்த ராசிக்காரர்களிடம் அன்பாக பேசினால் காரியத்தை சாதிக்கலாம்.

மகரம்
மகரம் ராசிக்காரர்கள் நிறைய விடயங்களை புலம்புவார்கள். ஆனால் அதையெல்லாம் நம்பக் கூடாது. இந்த குணமானது மகர ராசிக்காரர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

கும்பம்
கும்பம் ராசி உள்ளவர்கள் அடுத்த அம்பானி நான் தான் என்று நம்புவது போல மற்றவர்களிடம் பேசுவார்கள். அதற்கு நாம் ஆம் என்று தலை மட்டும் அசைத்தால் போதும்.

மீனம்
மீனம் ராசி உள்ளவர்கள் மற்றவர்களிடம் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதனால் இவர்கள் மற்றவர்களின் ரகசியத்தை தெரிந்து வைத்திருப்பார்கள்.