இந்திய அணியின் தலைவரான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள st regis astor ballroom இல் நடைபெற்றது.
இதில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான கயன் சேனநாயக்கவை கோலி தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கயன் சேனநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன், சச்சின், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலருடனும், கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இலங்கை அணியின் தீவிர ரசிகர் ஒருவருக்கு விராட் கோலி கொடுத்துள்ள முக்கியத்துவம், அவருடைய நல்ல குணத்தை பிரதிபலிப்பதாக சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
அத்துடன், இலங்கை ரசிகருக்கு கிடைத்த இந்த அதிஷ்டம் குறித்தும் பரவலாக பேசப்படுகின்றது.
மேலும், குறித்த திருமண வரவேற்பு நிகழ்வில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள், இந்திய அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.