அத்தை மருமகன் விபரீத உறவால் பயங்கரம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞன் ஒருவன் அத்தையுடன் உல்லாசமாக இருந்ததில் அவரது அத்தை நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அவர் தனது அத்தையை விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் கமலிஜீத் என்ற இளைஞன் அமிதா கவுர் என்ற தனது அத்தை முறையான பெண்ணுடன் பழகி வந்துள்ளான். இவர்களது பழக்கம் உடலுறவில் ஈடுபடும் அளவுக்கு சென்றுள்ளது.

பலமுறை இந்த இளைஞன் தனது அத்தையுடன் உடலுறவு கொண்டு உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் அந்த பெண் நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அந்த அத்தை முறையான பெண் அந்த இளைஞனிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞன் நீங்கள் எனக்கு அத்தை முறை, எனவே உங்களை திருமணம் செய்துகொள்ள முடியாது. இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என கூறியுள்ளான். இதனையடுத்து முதலில் அமிதா விஷம் குடித்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் கமலிஜீத் விஷம் அருந்தாமல் நினைவிழந்த அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

பின்னர் அந்த பெண்ணின் சடலத்தை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் போட்டுள்ளான். இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி கமலிஜீத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.