என் மகள் போர்ஷிகாவை மிஸ் செய்கிறேன்-தாடி பாலாஜி கண்ணீர்..!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். “ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார், தினமும் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்” என்று நித்தியா, தாடி பாலாஜி மீது போலீசில் புகார் கொடுத்தார். “என் மனைவிக்கும் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருக்கிறது.

1495514941-8792என் மனைவியை பயன்படுத்தி என்னை மனோஜ்குமார் மிரட்டி வருகிறார்” என்று தாடி பாலாஜியும் போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது குழந்தைகள் பங்கேற்கும் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எபிசோடில் கலந்துகொண்டார்.

என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன்-தாடி பாலாஜி அழுகை..!

இதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசியவர், இவர்களை பார்க்கும் போது என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன் என கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.