கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார். அதே சமயம் ஆளும் அதிமுக வேட்பாளரான மதுசூதனனும் தோல்வியுற்றுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க அழகிரி “ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரை திமுக தேர்தல்களில் வெற்றி பெறாது. பிற கட்சிகளில் இருந்து பிழைப்புக்காக திமுகவிற்கு வந்தவர்களுக்கு பதவி அளித்து ஸ்டாலின் தனது பக்கத்தில் வைத்துக்கொள்கிற வரை திமுக ஒருபோதும் தேர்தல்களில் வெற்றி பெறப்போவதில்லை” எனவும்,
“தினகரனின் உழைப்பின் காரணமாகவே அவர் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்” எனவும் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.