தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை ‘இடிச்சபுளி’ என மர்ம நபர்கள் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவானது தோல்வியடைந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் பெருவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் அவசரமாக கூடியது.
இதில் தினகரன் அணியினர் அனைவரும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் தினகரன் ஒருமுறை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இடிச்சபுளி என கூறியிருந்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் யாரோ ஒரு மர்ம நபர் தினகரன் கூறிய வார்த்தையை தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் ‘இடிச்சப்புளி பழனிச்சாமி’ என பெயர்மாற்றம் செய்துள்ளனர்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர்களின் பெயர்கள் ஒரே நாளில் பல்வேறு பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.