தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான அருணிமா 2011ஆம் ஆண்டில் தொடர்வண்டியில் பயணம் செய்தபோது குண்டு வெடிப்பில், கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஓடும் தொடர்வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார்.
படுகாயம் அடைந்ததால், இடது காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை
இப்படியே முடங்கிவிட கூடாது என எண்ணி, அதன்பிறகு உலகின் உயரமான சிகரமாகிய எவரெஸ்ட்டில் ஏறி சரித்திர சாதனை படைத்தார்.
சமீபத்தில் சேலை அணியாமல் உஜ்ஜயினி கோவிலுக்குள் நுழையக் கூடாது என்கிற தடை இவர் மீது பாய்ந்துள்ளது
கோவிலில் நுழையஅனுமதி மறுத்த கோவில் நிர்வாகிகள் அவரது உடல் ஊனத்தை குத்திக்காட்டி ஏளனம் செய்துள்ளனர்.
மேலும் அருணிமாகூறுகையில்,
சேலை அணிந்த பெண்களையும், வேட்டி அணிந்த ஆண்களையும் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் ஜீன்ஸ் அணிந்த ஆண்கள் கோவிலுக்குள் செல்ல உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இந்த தடை என்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது, இது எவரெஸ்டை வெற்றி கொள்ள அனுபவித்த கஷ்டத்தை விட இது மிகவும் மோசமானது என அருணிமா தெரிவித்துள்ளார்