வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீடசை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான டுலந்தி ரசந்திக பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சதகரமலன்கர பிரிவேனாவைச் சேர்ந்த பத்பெரிய முதவன்ச தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.