அமெரிக்காவில் தன் தாயின் மூலமாக, ஏழு ஆண்டுகளாக இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு, ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் டேனி க்ராகெட், கடந்த 2005ஆம் ஆண்டு அவரது வீட்டில் இருந்த இருட்டு அறை ஒன்றில் இருந்து காவலர்களால் மீட்கப்பட்டார்.
விசாரணையில், டேனியின் தாயே அவரை ஏழு ஆண்டுகளாக அந்த அறையில் அடைத்து வைத்ததும், உண்பதற்கு திரவ உணவை மட்டுமே அளித்து வந்ததும் தெரிய வந்தது.
மீட்கப்பட்ட டேனி, மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அதன் பின்னர், இரண்டுகள் கழித்து பெர்னி மற்றும் டயானே என்ற தம்பதியினர் டேனியைத் தத்தெடுத்தனர்.
டேனி குறித்து அவரை தத்தெடுத்த பெர்னி கூறுகையில், ‘டேனி பல ஆண்டுகளாக தனிமையிலும், இருளிலும் இருந்ததால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.
அவளுக்கு மற்றவர்களுடன் பழக தெரியவில்லை, மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். பின்பு, அவளுக்கு பேசுவதற்கு பயிற்சி அளித்தோம், திட உணவுகளை கொடுத்தோம்.
மேலும் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்தோம். ஆனால் அவளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது பின்னர் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் என் மனைவியால் அவளை கவனித்துக் கொள்ள முடியவில்லை.
அத்துடன் என்னை விவாகரத்தும் செய்துவிட்டார், என்னால் டேனியை தனியாக கவனித்துக் கொள்ள முடியாததால், அவளை காப்பகம் ஒன்றில் சேர்த்தேன், தற்போது 19 வயதாகும் டேனி, இன்னமும் குழந்தையாகவே இருக்கிறாள்.
என்னால் அவளுக்கு அன்பை மட்டுமே தர முடிகிறது, ஒரு நல்ல குழந்தையை, ஒரு மோசமான தாய் இப்படி மாற்றிவிட்டார் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.