வைத்திய சாலைக்கு கொண்டு வர முன் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது?? போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர்

ஜெ. இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டார்: போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. தினமும் ஒவ்வொரு தகவல்களாக வருகின்றன.

இதில் எது உண்மை, எது வதந்தி என கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்த பெண் மருத்துவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஒன்றில் அந்த பெண் மருத்துவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது போல மக்களை ஏமாற்றினார்கள் என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.