நடந்த விநோத திருட்டு: 40 வயது பெண்ணின் கைவரிசை வீடியோ!

லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் 40 வயது பெண் ஒருவர், 69 வயது பாட்டியின் பையில் இருந்து பணத்தை திருடும் காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் Ilford பகுதியில் உள்ள Exchange ஷாப்பிங் மாலில் உள்ள லிப்டில் கிழே செல்வதற்காக 69 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் நிற்கிறார்.

அப்போது வேகமாக உள்ளே வந்த மூன்று பேரில் இரண்டு ஆண்கள் அந்த பாட்டியிடம் பேச்சு கொடுக்கின்றனர்.

மூன்றாவது நபரான பெண் பாட்டியின் பையில் இருக்கும் பணத்தை திருடுகிறார். இந்த சம்பவம் கடந்த ஜுலை மாதம் 26-ஆம் திகதி நடந்துள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ள பொலிசார் மக்கள் சற்று கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திருட்டில் தொடர்புடைய பெண்ணிற்கு 40 வயது இருக்க கூடும் என்றும் பேச்சு கொடுத்த இரண்டு ஆண்களுக்கு வயது 30 இருக்க கூடும் எனவும் பொலிசார் சந்தேகத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த பாட்டியின் பையில் இருந்து £1,000 திருடப்பட்டிருப்பதாகவும், இவர்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்.