கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பாரிய பல மாற்றங்கள்!

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பாரிய பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கு 60 வீதம் அதிகரிப்பதற்கு மாகாண நகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

5a434ceba24a7-IBCTAMILபோக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொழும்பு நகரை மறைக்கும் வகையில் இலகு ரயில் சேவை ஒன்றை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஆலோசகரும் பல்கலைக்கழக பேராசிரியருமான டிமந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரம் உட்பட பல பிரதேசங்களை மறைக்கும் வகையில் இந்த ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொம்பனி தெரு, பம்பலப்பிட்டி, பொரளை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கண் வார்ட், காமினி அரங்கு ஊடாக கொள்ளுப்பிட்டிய மற்றும் கோட்டையில் இருந்து ஒரு வீதியும், கொட்டஹேன ஊடாக மருதானையில் இருந்து மட்டக்குளி வரையிலும், பம்பலப்பிட்டியவில் இருந்து கிருலப்பனை மற்றும் தெமட்டகொட வரையிலும் இலகு ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொட்டாவ மற்றும் கடுவல வரை மாலபேயில் இருந்து கிரிபத்கொடை ஊடாக ஆமர் வீதியில் இருந்து கடவத்தை வரை இன்னும் இரண்டு வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்காக இலகு ரயில் சேவை திட்டத்தின் நிதிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் வருடம் கையொப்பமிடப்படவுள்ளது.

மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை நிர்மாணிக்கப்படுகின்ற இலகு ரயில் வீதி பத்தரமுல்லை, ராஜகிரிய, பொரளை, கண் வைத்தியசாலை மற்றும் காமினி அரங்கு ஊடாக நிர்மாணிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாலபேயில் இருந்து கொள்ளுப்பிட்டிய வரை பயணிப்பதற்கு 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொழும்பு மற்றும் சுற்றியுள்ள ஏரி வீதியில் படகு சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.