Chennai:பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கிறார். ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ , ‘சவுகார்பேட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் V.C..வடிவுடையான், தமிழில் இயக்கவுள்ள புதிய படத்தில் சன்னி லியோன் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு ‘வீரமாதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன் வடகறி படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலில் நடனமாடியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தான் பேசிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சன்னி லியோன்.
அந்த வீடியோ பதிவில் ” வணக்கம் தமிழர்களே நான் வீரமாதேவியாக உங்களைச் சந்திக்க உள்ளேன்”என பேசியுள்ளார். சரித்திரப் படமான வீரமாதேவி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தினை ஸ்டீவ்ஸ் கார்னர் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் Ponse.ஸ்டீபன் தயாரிக்கிறார். சரித்திரப் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் சிஜி காட்சிகள் பேசும் படியாக அமையும் என தகவல் வெளிவயாகியுள்ளது.
சன்னி லியோன் பேசும் தமிழை கேட்டு தமிழர்கள் கொலை வெறி கொள்ளவேண்டாம்