யாழில் மல்லாகம் பகுதியில் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து, உள்நாட்டில் வேறு ஒரு வாலிபருடன் தொடர்பில் இருந்த 23 வயது யுவதி தொடர்பில் பொலிசாரில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திய பொழுது அந்த யுவதிக்கும் அந்த வாலிபருக்கும் இருந்த கள்ள உறவை, அவரது உறவின சிறுபெண் ஒருவர், வெளிநாட்டில் இருக்கும் யுவதியின் கணவருக்கு தெரியப்படுத்திய நிலையில், அந்த சிறுபெண் மேல் கோவமடைந்த யுவதி.. அந்த சிறுபெண்ணை பழிவாங்கும் நோக்குடன், தான் தொடர்பில் இருந்த வாலிபரின் உதவியுடன் அந்த சிறுபெண்ணின் புகைப்படங்களை தவறான முறையில் முகநூல் (பேஸ்புக்) ஒன்றை ஆரம்பித்து பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பொழுது அந்த பெண்ணிடம் தவறான தொடர்பினை வைத்திருந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய, யாழ் மல்லாகத்தை சேர்ந்த 29 வயதுடைய “ரெவினோ லியோ” என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் இந்த இளம்பெண்ணுக்காக, தனது மனைவி, மூன்றுவயது குழந்தையை கைவிட்டு உள்ளார்.
அதேபோல் அண்மையில் பிரான்சில் உள்ள உறவுக்கார வாலிபரை திருமணம் செய்த இளம்பெண்ணும், இந்த “மன்மதனுடன்” கள்ளக்காதல் கொண்டு வாழ்ந்துள்ளார்.
இது தொடர்ப்பாக இணையத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸாரின் உதவியுடன், இணைய புலனாய்வு செய்தியாளர்கள், திட்டமிட்டு எடுத்த நடவடிக்கையினால் அவ்வாலிபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் விட்ட தவறுகளுக்கு எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்டதுடன், “இனிமேல் இதுபோன்ற தவறுகளை விட மாட்டேன், என் மீது வழக்கு தாக்கல் செய்தால், தனது தொழிலை இழப்பதுடன், பாதிப்பு வருமென” அழுகையுடன் கோரிக்கை வைத்ததினாலும், அடுத்து, எம்மிடம் உதவி கோரிய சிறு பெண்பிள்ளை, மற்றும் இந்த “மன்மதனுடன்” இணைந்து செயல்பட்ட இளம்பெண்களின் நன்மை கருதியும் வழக்கை தாக்கல் செய்யாமல் விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து தவறான முறையில் முகநூல் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் யாவற்றையும் போலீசார் கைப்பற்றி அனைத்து விடயங்களும் அழிக்கப்பட்டன. மேலும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவரை விடுதலை செய்தனர்.
இம் முகநூல் சிக்கலில் இருந்த பெண்ணிற்கு உதவும் நோக்குடன் இணையம் மூலமாகவே அந்த தவறான முகநூல் பாவனையை கண்டு பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான முகநூல் செயர்ப்பாடுகளால் பல பெண்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பெண்கள் தமது முகநூல் விடயங்களில், மிகுந்த கவனமாக இருக்குமாறும் இணையம் கேட்டுக்கொள்கின்றது.
*** “மன்மதன்” ரெவினோ லியோ தொழில் புரியும் நிறுவன முகாமையாளர் மற்றும் ஊழிய நண்பர்களுக்கு…
மேற்படி “மன்மதன்” ரெவினோ லியோ தொழில் புரியும் —- நிறுவன முகாமையாளர், ஊழிய நண்பர்களே.. இவனைப் போன்ற “மன்மதன்” எல்லோரையும் கட்டுப்படுத்துவதும், நேர்வழிப் படுத்துவதும் உங்கள் கடமை அல்லவா?..
இது அவனின் தனிப்பட்ட விடயமென பாராமுகமாக இராது, தயவுசெய்து இதில் நீங்கள் கூடிய கவனம் செலுத்தி, இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாத வகையில் கவனம் செலுத்துங்கள்…
“மன்மதன்” ரெவினோ லியோ, நண்பர்களின் கவனத்துக்கு…
“ஒருவனைப் பற்றித் தெரிய வேண்டுமெனில், அவனது நண்பன் யார் என்று பார்?” என்பார்கள்.. ஆகவே நீங்கள் இவனது உண்மையான நண்பர்களாக இருந்தால், இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாத வகையில் இவனைத் திருத்துங்கள்..
இணையத்தின் புலனாய்வு நிருபர்களுக்கு, இந்த “மன்மதன்” ரெவினோ லியோவின் விபரங்கள், புகைப்படங்கள் மட்டுமல்ல இவனது நண்பர்களினதும் புகைப்படங்களும், விபரங்களும் கிடைக்கப் பெற்ற போதிலும் இணையம் அதனைப் பிரசுரிக்க விரும்பவில்லை.
ஏனெனில் இவனது குற்றங்களுக்கு, நண்பர்கள் பொறுப்பாளிகளாக முடியாது எனும் நோக்கம் தான். ஆயினும் நண்பர்கள் இவனை திருத்துவார்கள் என்று நம்புகிறோம்.
இணையமானது, எம்மிடம் உதவி கோரிய சிறு பெண்பிள்ளை, மற்றும் இந்த “மன்மதனுடன்” இணைந்து செயல்படட இளம்பெண்களின் நன்மை கருதியும், மற்றும் மேற்படி “மன்மதன்” எழுத்து மூலம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், நாம் பொலிஸாரின் உதவியுடன் தகுந்த நடவடிக்கை எடுத்த போதிலும், வழக்கை தாக்கல் செய்யாமல் “இறுதி மன்னிப்பு” வழங்கி மன்மதனை விடுவித்துள்ளோம்.
அதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தி இவர்களால் முதலில் ஆரம்பிக்கப்பட்ட முகநூலை நிறுத்திய போதிலும், இவர்கள் மீண்டும் முகநூல் பக்கத்தை தவறாக பயன்படுத்தியதாலேயே, போலீஸ் நடவடிக்கை எடுத்ததுடன், இதனை பகிரங்கப் படுத்துவதன் மூலம் இவர்களுக்கும், எல்லோருக்கும் இது ஓர் பாடமாக அமையும் எனும் நோக்கில் பகிரங்கப்படுத்தி உள்ளோம்.
இணைய புலனாய்வு செய்தியாளர்கள் –
(மேலும் பல ஆதாரங்கள், புகைப்படங்களை நாம் தற்போதைக்கு பிரசுரிக்கவில்லை, ஆயினும் இந்நடவடிக்கை தொடர்ந்தால் அனைத்தும் பகிரங்கப் படுத்தப்படும்.)