வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துக்கு பொறுத்திருந்தே பதிலளிப்பேன்: மாவை

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பொறுத்திருந்தே பதிலளிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

c46873ea03dd52dcf944161527b28da8_XLகொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தைச் சாடி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையை நான் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை.

எனினும், அவரின் கருத்துக்களுக்கு பொறுத்திருந்தே பதிலளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த வாராந்த கேள்வி பதிலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாகச் சாடி கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க நிபந்தனைகளையும் அவர் விதித்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.