சிறுநீரகப் புற்று நோய் இருப்பதற்கான தொடக்க அறிகுறிகள்!!

ஒவ்வொரு வருடமும் 11000 ஆண்கள் மற்றும் 5000 பெண்கள் சிறுநீர்ப்பை புற்று நோயால் பலியாகின்றனர்.

பொதுப்படையாக ஏற்படும் புற்று நோயில் 6வது இடத்தை பிடிக்கிறது இந்த சிறுநீர்ப்பை புற்று நோய். இந்த புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படுகின்றன.

kidney-cancer-25-1488000564அவற்றை அறிந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் மனித உயிரை காப்பது சுலபம். ஆகவே அந்த அறிகுறிகளை இங்கே கொடுத்திருக்கிறோம்.

இதனை உணர்ந்து உடனடியாக செயல்படுவது நல்லது. சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சில அறிகுறிகள் பற்றிய தகவலை கீழே காணலாம்.

சிறுநீரில் இரத்தம்:

சிறுநீரில் திட்டு திட்டாக இரத்தம் வெளியேறலாம். சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறலாம். அல்லது இரத்தம் உறைந்து காணப்படலாம்.

இவையெல்லாம் சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள். சிறுநீர்ப்பை புற்று நோயின் மிக சிறந்த அறிகுறி சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்.

இதனை கண்டால் அலட்சியம் செய்ய வேண்டாம். சிறுநீர்ப்பை புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 80% இந்த அறிகுறியை அறிந்திருப்பர். பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 4 பேர் இந்த பாதிப்பை கொண்டிருக்கின்றனர்.

சிறுநீர் வெளியேறும்போது, பிங்க் நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் இருக்கலாம். உறைந்த இரத்தமாகவும் இவை வெளியேறலாம். இப்படி வெளியேறும் இரத்த கசிவு சிறிய அளவாக இருக்கும்போது சிறுநீர் பரிசோதனை செய்து அதனை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

இத்தகைய இரத்தக் கசிவு தொடர்ச்சியாக இல்லாத போதும் பரிசோதனை செய்வது நல்லது . சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக தொற்று , சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும்போதும் சிறுநீரில் இரத்தம் கசியும்.

இத்தகைய நோய்களுக்கும் சிகிச்சை மிகவும் முக்கியம். ஆகவே இதனை அலட்சிய படுத்துவது தவறு.

சிறுநீர் வெளியேறும்போது வலி:

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். சிறுநீரில் இரத்தம் கசிவதை போல் இது ஒரு பொதுவான அறிகுறி இல்லை.

ஒரு வித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று , சிறுநீர்ப்பையில் ஏற்படும் வேறு பிரச்சனைகள் போன்றவற்றிலும் இதே அறிகுறி தென்படும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இவை புற்று நோயின் அறிகுறியாக இருக்கும்போது, இதனை அலட்சியப்படுத்துவது நன்மை இல்லை. இதன் அடுத்த கட்ட பரிசோதனை சரியான பிரச்சனையை வெளிப்படுத்தும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது:

இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது , மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வு இந்த புற்று நோயின் அறிகுறியாகும். மற்ற நேரங்களில் சிறுநீரை அடக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பவர்கள், இந்த சூழ்நிலையில் திடீரென்று, உடனடியாக சிறுநீர் கழிக்கும் உணர்வை பெறுவார்.

இதனை கவனமாக கவனிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் , இதே அறிகுறி, வேறு சிறுநீரக தொற்றாலும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதோடு சேர்த்து இரத்த கசிவும் இருந்தால் சிறுநீர்ப்பை புற்று நோயாக இருக்கும் வாய்ப்புள்ளது.

புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில், சிறியளவு இரத்த கசிவு மட்டுமே இருக்கும். அதனால், சிறுநீரின் நிறத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆகவே பரிசோதனை செய்வது தான் நல்ல தீர்வு.

கீழ் முதுகு மற்றும் அடி வயிறு வலி:

முதுகின் கீழ் பகுதியில் அல்லது அடி வயிற்று பகுதியில் தாங்க முடியாத வலி இருந்தால், இதற்கு பல வித காரணங்கள் உண்டு.

செரிமான கோளாறு, தவறான நிலையில் தூங்குவது, போன்றவற்றுக்கும் இதே அறிகுறிகள் தென்படும். மேலும் புற்றுநோயின் அறிகுறியும் இதுவே ஆகும். சிறுநீர்ப்பை புற்று நோயில் இதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது.

எலும்பு வலி, எடை குறைப்பு:

இதுவரை கண்ட எல்லா அறிகுறிகளும் புற்று நோயின் ஆரம்ப நிலையை குறிக்கும். நோயின் தாக்கம் அதிகமாகும் போது, இது மற்ற இடங்களையும் தாக்க தொடங்கும்.

இதனை மெட்டாஸ்டாடிக் கான்செர் என்று கூறுவர். சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கம் அதிகமாகும் போது வேறு சில அறிகுறிகளை காணலாம்.

அவை, சிறுநீர் கழிக்க முடியாமல் போவது கீழ் முதுகில் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுவது எலும்புகளில் வலி ஏற்படுவது சோர்வு பாதங்களில் வீக்கம் பசியின்மை எடை குறைப்பு போன்றவையாகும்.

பெண்களின் கவனத்திற்கு:

பொதுவாக சிறுநீர்ப்பை புற்று நோய் ஆண்களை குறிவைப்பதாக கருதப்படுவது உண்மை இல்லை. பெண்களை விட ஆண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் இதனால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் பெண்கள் அதிகம் உள்ளனர்.

ஆண்களில் 55000 பேருக்கு இந்த புற்று நோய் இருப்பதாகவும் அதில் 11000 பேர் இறப்பதாகவும், பெண்களில் 17000 பேருக்கு இந்த புற்று நோய் இருப்பதாகவும் அதில் 5000 பேர் இருப்பதாகவும் கூறும் தகவலில் இருந்து பெண்களின் இறப்பு விகிதம் அதிகம் என்ற உண்மை விளங்குகிறது.

அப்படியென்றால் இந்த அறிகுறிகள் பெண்களுக்கு வேறு விதமாக உள்ளதா ? பெண்கள் ஏன் இந்த புற்று நோயின் முற்றிய நிலையில் இதனை கண்டறிகிறார்கள் என்ற கேள்விகள் முளைக்கிறது.

இரத்த கசிவு ஏற்படும்போது, இதனை எப்போதும் வரும் மாதவிடாய் கசிவு மற்றும் மாதவிடாய் இரத்த திட்டுகள் என்றும் பெண்கள் நினைத்து அலட்சியப்படுத்துவது தான் இதன் காரணம். சிறு நீர் பாதை தொற்று மற்றும் மெனோபாஸுக்கு முந்தைய காலா கட்டத்தில் ஏற்படும் இரத்த கசிவோடு இணைத்து குழப்பி கொள்வதும் ஒரு காரணம்.

ஆகவே அடுத்த அடுத்த கட்டத்தில் இதன் அறிகுறிகளை ஆராய்ந்து, சிகிச்சை மேற்கொள்வதால் அவர்களால் இதில் இருந்து குணமடைய முடிவதில்லை என்று கூறப்படுகிறது.

பெண்கள் இரத்த கசிவு பிரச்சனையை சீராக அறிந்து, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அது எந்த வகை இரத்த கசிவு, என்பதை மருத்துவர்கள் அறிந்து சிகிச்சை அளிக்க இது பெரிதும் உதவும்.

கவனிக்க வேண்டியவை:

புகை பிடிப்பது இந்த வகை புற்று நோயை இரண்டு மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. ஒரு முறை இந்த புற்று நோயில் இருந்து விடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். மறுபடி இதே புற்று நோய் ஏற்படும் அபாயம் உண்டு.

சிறுநீர்ப்பையில் பிறக்கும்போதே உண்டாகும் சில கோளாறுகள், அதிகமாக ரசாயன பொருட்களுக்கு மத்தியில் வேலை புரிவது போன்றவை இந்த வகை புற்று நோயை உண்டாக்கும்.

இந்த வகையில் அதிகமான அபாயத்தை சுமந்து இருப்பவர்கள் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்ல பலனை தரும்.