நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வழமைபோலவே யாழ்ப்பாண மாணவர்கள் தமது திறமைகளை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் மிகவும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலும் படித்து தமது திறமையை நிரூபித்துள்ளனர்.யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியிலுள்ள அச்செழுக் கிராமத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த மகேஸ்வரன் டிலக்சன், தந்தையாருடன் தோட்டத்தில் வேலை செய்வதுடன் தனது கல்வியை தொடர்ந்து வந்துள்ளார். மேலும்,வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று (3A), தான் பயின்ற பாடசாலையான யாழ் மத்திய கல்லூரிக்கும், தமது அச்செழுக் கிராமத்திற்கும், தமது பெற்றோருக்கும், ஏன் ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.பல்வேறு சோதனைகளின் மத்தியில், பல தடைகளையும் தாண்டி ,சாதனை படைத்த மாணவன் டிலக்சனுக்கும், இவருடன் உயர்தரப் பரீட்சையில் சாதனைகள் படைத்து நிற்கும் அனைத்து மாணவர்களுக்கும், எமது நியூலங்கா இணையத்தளத்தின் சார்பாக பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.