அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது மின்சார நிலுவைக் கட்டணம் 284.46 பில்லியன் டொலர்கள் (28,446 கோடி டொலர்) எனத் தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த 58 வயதான மேரி ஹொரோமென்ஸ்கி எனும் பெண்ணுக்கே இந்த அதிர்ச்சி அனுபவம் ஏற்பட்டுள்ளது.பெனலெக் எனும் நிறுவனத்தால் இப்பெண்ணின் வீட்டுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.அண்மையில் தான் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணம் எவ்வளவு என்பதை அந்நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் அறிந்துகொள்வதற்கு, மேரி ஹொரோமென்ஸ்கி முயற்சித்தார். இதன்போது, 284,460,000,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என இணையத்தளம் காட்டியது.வியப்படைந்த மேரி ஹொரோமென்ஸ்கி அத்தொகை எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள இலக்கங்களுக்கூடாக பார்வையை செலுத்தினார். நூறு, ஆயிரம், மில்லியன் மற்றும் பில்லியன்களையும் அத்தொகை கடந்து. சென்றது.மொத்தமாக 28 ஆயிரத்து 460 கோடி டொலர்களை மேரி ஹொரோமென்ஸ்கி செலுத்த வேண்டுமென காட்டப்பட்டது. இலங்கை நாணய மதிப்பில் இத்தொகை சுமார் 43,38,299 கோடி ரூபாவாகும்.
இந்தத்தொகையை செலுத்துவதற்கு அவருக்கு ஒரு வருட அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. குறைந்தபட்ச முதற்கட்ட கொடுப்பனவாக 28176 டொலர் (சுமார் 43 இலட்சம் ரூபா) அதிர்ச்சியடைந்த மேரி ஹொரோமென்ஸ்கி இத்தொகை தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தார். மின்சார விநியோக நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது அவரின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. மேற்படி தொகை தவறானது எனவும் 284.46 டொலர்கள் (சுமார் 43,300 ரூபா) மாத்திரமே மேரி ஹொரோமென்ஸ்கி செலுத்த வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்நிறுவனத்தின் பேச்சாளர் மார்க் டேர்பின் இது தொடர்பாக கூறும்போது, இவ்வளவு பெருந்தொகை மின்சாரக் கட்டணப் பட்டியலை நான் ஒருபோதும் கண்டதில்லை. இத்தவறு குறித்து எம்முடன் ஹொரோமென்ஸ்கி தொடர்பு கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார்.