மூன்று சூரியன்கள் திடீரென தோன்றியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் வடகிழக்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது.சீனாவின் வடகிழக்கு பகுதியில் ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோன்றுவது போல் காட்சியளித்தது.வளி மண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக சூரியனின் பிம்பம் இதுபோல் வானில் பிரதிபலிக்கும் நிகழ்வு எப்போதாவது நடக்குமென வானியல் ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர்.ஹெய்லாங்ஜியாங் மாகாணம் முழுவதும் சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அரிய வானியல் அதிசயத்தை திரளான மக்கள் கண்டு களித்தனர்.பின்னர் சூரியன் பிரகாசம் அடைந்ததும், அதன் இரு பிரதிபிம்பங்களும் மறைந்தன.இதனை இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என சீன மக்கள் வர்ணனை செய்கின்றனர்.