வேகத்தைக் குறைத்தமைக்கு மன்னிப்கோரும் அப்பிள் நிறுவனம்!

ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்காக அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாக அப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.இதையடுத்து வெளியிடப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.அத்துடன், இதனால் பாதிக்கப்பட்ட தொலைபேசிகளுக்கு மென்பொருள் மற்றும் மின்கலங்களை மாற்றித் தருவதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.அப்பிள் நிறுவனம், தனது புதிய உற்பத்திகளை நுகர்வோர் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக, அதிக வலுவுடைய மேம்படுத்தப்பட்ட மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிவேற்றிக் கொள்ளுமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.இந்த மென்பொருளை தரவேற்றம் செய்ததை தொடர்ந்து தொலைபேசிகளின் வேகம் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த விவகாரம் தொடர்பாக அப்பிள் நிறுவனம் மீது அமெரிக்காவில் எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.