அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 46 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.சென்னை: அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ.தி.மு.க. வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி (மேலூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்), துரை.தனராஜன் (உசிலம்பட்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
மகேஸ்வரி ரவி (பொதுக் குழு உறுப்பினர், திருமங்கலம் தொகுதி), எஸ்.வீரமாரி பாண்டியன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), ஆர்.செல்வம் (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்)
எஸ்.எஸ்.மனோகரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), கே.கருத்தக்கண்ணன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), என்.ராமசுப்பிரமணியன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)
டி.பிரவீன்குமார் (மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்), த.நேரு (மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர்), எம்.சோமாசி (மேலூர் ஒன்றியக் கழக செயலாளர்), ஆர்.சவுந்திரபாண்டியன் (செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்), எம்.பக்ருதீன் (சேடபட்டி ஒன்றிய சிறு பான்மையினர் நலப்பிரிவு செயலாளர்).
ஆர்.விருமப்பராஜன் (வாடிப்பட்டி ஒன்றிய அவைத் தலைவர்), கே.எஸ். சுப்புராஜ் (உசிலம்படடி ஒன்றிய துணை செயலாளர்), எஸ்.சேதுராமன் (உசிலம் பட்டி ஒன்றிய பொருளாளர்), எஸ்.சரவணன் (மேலூர் நகர செயலாளர்).
எம்.கே.ராமச்சந்திரன் (சோழவந்தான் பேரூராட்சி செயலாளர்), தி.கோபி (திருப்பாலை பகுதி செயலாளர்), ஜி.ராமமூர்த்தி (அவனியாபுரம் பகுதி செயலாளர்), என்.எஸ்.எஸ்.மணி (அவனியாபுரம் பகுதி மாவட்ட பிரதிநிதி).
எஸ்.எம்.சிவக்குமார் (அவனியாபுரம் பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்), எம்.முனியாண்டி (எ) ராஜா (அவனியாபுரம் பகுதி இலக்கிய அணி செயலாளர்), பி.ரபீக் (அவனியாபுரம் பகுதி சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்).
சுமதி மதியழகன் (திருப்பரங்குன்றம் பகுதி இணைச் செயலாளர்), என்.பாலகுரு (திருப்பரங்குன்றம் பகுதி பொருளாளர்), சி.சின்ன மருது (எ) ரமேஷ் (திருப்பரங்குன்றம் பகுதி மாணவர் அணி செயலாளர்), பி.எம்.முருகன் (திருப்பரங்குன்றம் பகுதி விவசாய பிரிவு செயலாளர்), டி.ராஜமாணிக்கம் (திருப்பாலை பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
கே.ஆர்.ராஜேந்திரன் (வண்டியூர் பகுதி அவைத் தலைவர்), வி.சேதுராயன் (29-வது வட்ட செயலாளர், வண்டியூர் பகுதி), கே.ராமநாதன் (3-வது வட்ட செயலாளர் திருப்பாலை பகுதி), எம்.நவநீதகிருஷ்ணன் (24-வது வட்ட செயலாளர், திருப்பாலை பகுதி), ஆர்.சூரி (எ) வீரபாண்டி (96-வது வட்ட செயலாளர், திருப்பரங்குன்றம் பகுதி).
கே.ஜி.பி.ஞானமூர்த்தி (விழுப்புரம் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர்), சி.தென்னரசு (தருமபுரி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்), எஸ்.கலைச்செல்வன் (நீலகிரி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்), ஜே.சீனிவாசன் (திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்)
சமயபுரம் சி.ராமு (திருச்சி புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்), எஸ்.கார்த்திகேயன் (பெரம்பலூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர்), மா.சேகர் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்)
கா.டேவிட் அண்ணா துரை (மதுரை மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்), ஸ்டார் எம்.ரபீக் (தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்)
புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் இ.ஏ.ரத்தினசபாபதி, வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.பாலசுப்பிரமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.