சிகாகோவில் இந்திய இளைஞன் ஒருவன் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகாகோ டோல்டன் எரிவாயு நிலையத்தில் திடீரென கொள்ளைக்கும்பல் ஒன்று சுற்றி வளைத்து கொல்லையடிக்க முயன்றுள்ளது.இதனை தடுக்க முற்பட்ட எரிவாயு நிலைய ஊழியர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அர்ஷத் வோரா கொள்ளையர்களால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும் சம்வத்தில் இந்;தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அர்ஷத் வோராவின் உறவினர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் எரிவாயு நிலைய சிசிடிவி காணொளி மூலம் கொள்ளையர்களை தேடிவருவதாகவும் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்;கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.