நியுயோர்க்கில், புது வருடத்தை முன்னிட்டு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு, நியுயோர்க் டைம் சதுக்கத்தில் வெடிபொருட்களை கண்டறியும் மோப்ப நாய்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியுயோர்க்கில் நேற்றைய தினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, பொலிஸ் திணைக்கள ஆணையாளர் ஜேம்ஸ் ஓ நீல் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நியூயோர்க் டைம் சதுக்கத்துக்கு சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த அவர், இதுவரை நியூயோர்க் நகரத்துக்கு நேரடி அச்சுறுத்தல் எவையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் நியூயோர்க் டைம் சதுக்கம் மற்றும் ஏனைய பகுதிகளில் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை. என தெரிவித்த அவர், எனினும் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த காலங்களை விட அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என கூறியுள்ளார்.

இதேவேளை, டைம் சதுக்கத்திற்குள் நுழைபவர்கள் இரண்டு பாதுகாப்பு சோதனைகளை கடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புது வருடத்தை முன்னிட்டு நியுயோர்க்கில் பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு