தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை புத்தளையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்ற வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு வெளியான நிலையில் தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பருத்தித்துறை புத்தளையில் அமைந்துள்ள மாணவனின் வீட்டிற்குச் சென்ற வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையினையும் ஆளுநர் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்துள்ளார். இந்த விஜயத்தின்போது ஆளுநருடன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாள் ஏக்ஸ்.செல்வநாயகம், வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய யாழ் குடாநாடு சிறிது காலம் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட போதும் மீண்டும் முன்னேறி வருவதாக ஆளுநர் ரெஜினோலட் குரே தெரிவித்துள்ளார்.