அமெரிக்கா-துருக்கி இடையே ஒன்றுக்கு ஒன்று விசா வழங்கும் சேவையை பன்முகங்களிலும் மீண்டும் தொடர்வதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரமாக விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.
இந்நிலையில்,அமெரிக்க வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் முதல் அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை துருக்கி அரசு நிறைவேற்றியது. அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் உள்ளூர் பணியாளர்களை விசாரிக்கவும் கைது செய்யவும் இல்லை என்பதால், அந்நாட்டில் விசா வழங்கும் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
எனினும், அமெரிக்காவுக்கு துருக்கி அரசு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றும், துருக்கி மற்றும் அமெரிக்காவின் பொது மக்களுக்கு தவறான தகவலை அமெரிக்கா வழங்குவதாகவும் அந்நாட்டிலுள்ள துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.