கணவனை கொலை செய்த மனைவியை 7 ஆண்டுகளின் பின் கள்ளக்காதலனுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கூலித்தொழிலாளி செந்திலின் மனைவியான 3 பிள்ளைகளின் தாய் முத்துலக்ஸ்மி அதே ஊரில் உள்ள மாரிராமர் என்பவரின் கடையில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மாரிராமருக்கும் முத்துலக்ஸ்மிக்கும் இடையில் ஏற்பட்ட தகாத தொடர்பு காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலனுடன் முத்துலக்ஸ்மி ஓட்டன்சத்திரம் அருகே 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த செந்தில் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று தகராறு செய்து முத்துலக்ஸ்மியை தன்னுடன் வரும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துலக்ஸ்மி வருவதாக கூறி கூடச்சென்று போலியம்மனூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செந்திலை கொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் கொலை நடந்து 8 மாதங்களின் பின் இருவரையும் கடலூரில் வைத்து கைது செய்துள்ளதாகவும் வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்தவர்கள் கடந்த 7 வருடங்களாக மீண்டும் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இவர்களை தேடிவந்த பொலிஸார் மூலசத்திரம் பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்றையதினம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.